12 வயது பள்ளி மாணவன் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை

12 வயது பள்ளி மாணவன் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை

 

schoolboy has made it Nobel Book


12 வயது பள்ளி மாணவன் 31 கிலோ மீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றிக் கொண்டே ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையைச் சேர்ந்தவர் கே.நிதின் ஏழாம் வகுப்பு. தற்போது தனியார் பள்ளியில் படித்து வரும் இவர், இரண்டு ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி விளையாடி வருகிறார்.


நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான உலக சாதனை நிகழ்வு இன்று நடைபெற்றது.

schoolboy has made it Nobel Book


இதில் கலந்து கொண்ட நிதின் 1 மணி நேரம் 45 நிமிடம் 57 வினாடிகளில், 31 கிலோமீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார்


நித்தினியின் புதிய உலக சாதனைக்கு நோபல் உலக சாதனைக் குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அமலு, நகர்மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post