காஞ்சிபுரம் அருகே பள்ளி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்.இவருடைய மகன் லோகநாதன்.லோகநாதனுக்கு வயது 21, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
உடற்பயிற்சி செய்வதற்காக அருகில் உள்ள கிராமத்திற்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.அங்கு 9 ஆம் வகுப்பு மாணவியுடன் லோகநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை பயன்படுத்திய லோகநாதன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
தங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதைக் கேள்விப்பட்ட பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் . சிறுமிக்கு என்ன நடந்தது என்று அவர்கள் கேட்டனர், அவள் கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்.
லோகநாதன் மீது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தனர். லோகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.