விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வின் புகைப்படத்தை மலையாள நடிகர் பாபு ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
"மாஸ்டர்" படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் "லியோ" படத்தில் இணைந்துள்ளனர். காஷ்மீரில் ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், குளிரையும் பொருட்படுத்தாமல் நிறைய பேர் ஷூட்டிங்கில் இருந்தார்கள், இப்போது அது முடிந்துவிட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் இந்தி திரைப்படங்களில் பிரபலமான சஞ்சய் தத். மலையாள நடிகர் பாபு ஆண்டனி , இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன்,. நடிகை த்ரிஷா மற்றும் விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
பாபு ஆண்டனியின் கதையில், லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்தார். அவர்கள் சிறிது நேரம் பேசினார்கள், விஜய் மிகவும் கண்ணியமான இளைஞன். இளைய தளபதி விஜய் சார், மிகவும் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்.
“பூவிழி வாசலிலே”, “சூரியன்”, “விண்ணைத் தாண்டி வருவாயா” போன்ற என்னுடைய படங்கள் விஜய் பிடித்திருப்பதாக கூறினார். அதைக் கேட்ட எனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது, அவரைப் போன்ற பிரபலமான ஒருவரிடமிருந்து அதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நன்றாகப் பழகினார்கள். இப்படிப்பட்டவர்களை சந்திப்பது ஒரு பாக்கியம். அவர்களை தான் முதல்முறையாக சந்தித்ததாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , குணசித்திர நடித்து வரும் பாபு ஆண்டனி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.