ஜெயக்குமார் நேற்று சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மிகுந்த விரக்தியின் உச்சத்தில் பேசியுள்ளது வெளிப்படையாகியுள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் சகுனியாக உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேட்டியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பிக்பாக்கெட் என்று விமர்சித்துள்ளார், பிக்பாக்கெட் என்று சொல்வதற்கு பொறுத்தமானவர் ஓபிஎஸ் தான். எம்ஜிஆர் மாளிகையை சூறையாடியது பிக்பாக்கெட் இல்லையா?; அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதி துறை, தன்னிடம் இருந்த நிதித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறையை ஒற்றை காலில் இருந்து பிடுங்கியவர் ஓபிஎஸ். பதவி வெறி பிடித்தவராக இருந்தவர் ஓபிஎஸ் தான்.
டிடிவி தினகரன் தேனி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் ஓபிஎஸ் பற்றி மக்களுக்கு தெரிந்திருக்காது. அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்தபோது ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஏஜென்டாக பணியாற்றியவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சசிகலா குடும்பத்தையே தரக்குறைவாக அவப்பெயரை ஏற்படுத்தினார் ஓபிஎஸ்.
பின்னர் ஜெயலலிதா அமைத்து கொடுத்த அரசை கலைக்க வேண்டும் என்று நினைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். “ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது விசாரணை நடத்த வேண்டும்” என்றும் கூறினார். ஆனால் விசாரணை கமிஷன் முன்பு கூட ஆஜராகாமல் கடைசியாக சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாக கூறி சென்றார்.
கடந்த ஆண்டு, 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடந்த 9 இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முடியவில்லை. தனது மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்தார். தேனி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு தேர்தலில் ஓபிஎஸ் மட்டும் வெற்றி பெறுகிறார். வேறு யாரையும் வெற்றி பெற வைக்கவில்லை, இபிஎஸ் முதல்வராக கூடாது என செயல்பட்டார்.
அதிமுக என்பது கடல் போன்றது. ஆனால் சிலர் பேசுவதால் கூவமும் சமுத்திரமும் இணையுமா? அதிமுகவுக்கு பெயர் சொல்ல தகுதி இல்லை.
இடைத்தேர்தலை வைத்து பொது தேர்தலை கணிக்க முடியாது. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வராது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் 40/40 வெல்வோம் .எனக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.