தனியாக தங்கியிருந்த மருத்துவர் ,வருகை தந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி.
பெரம்பலூரில் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் பிரியங்கா.
ஆத்தூர் அருகே உள்ள சிவகங்கைபுரத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. திருமணமாகாத இவர், பெரம்பலூர் கல்யாண் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவருடைய சகோதர் அலைபேசியில் கூப்பிட்டபோது பிரியங்கா போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
பிரியங்காவின் அறை அலங்கோலமாக இருப்பதைப் பார்த்த ராஜசேகர் மிகவும் வருத்தமடைந்தார்.இதையடுத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது பிரியங்கா வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தரையில் அமர்ந்திருந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். விசாரணையைத் தொடங்கினார்கள்.இந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.