கேக் வெட்டிய கத்தியை வைத்து காதலி கழுத்தை அறுத்து கொலை

கேக் வெட்டிய கத்தியை வைத்து காதலி கழுத்தை அறுத்து கொலை

 

Girlfriend killed

பிரசாந்தும் நவ்யாவும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பிரசாந்த் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்  .நவ்யா காவல்துறையில் உதவியாளராக இருந்து வந்துள்ளார். 


நவ்யாவும் பிரசாந்தும் உறவினர்கள். பிரசாந்திற்குத் தெரியாமல் நவ்யா வேறொருவருடன்  பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. , ​​

இதனைத் தெரிந்து கொண்ட  பிரசாந்த் தனது காதலி நவ்யாவுக்கு போன்  அழைத்து கண்டித்துள்ளார் .இந்த விவகாரம் தொடர்பாக நவ்யா, பிரசாந்திடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.


கடந்த வாரம் நவ்யாவின் பிறந்தநாள் வந்தது, ஆனால் அவள் வெளியூரில் இருந்ததால் ,நேற்று முன்தினம் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.


பின்னர்  கேக்  வெட்டிய கத்தியை வைத்து , நவ்யாவை கழுத்தை அறுத்து பிரசாந்த் கொன்றுள்ளார்.

Girlfriend killed


போலீசார் நவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


வழக்குப் பதிவு செய்யப்பட்டதில், நவ்யாவுக்குத் வேறு ஒருவருடன் பழக்கம் தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்ட பிரசாந்த், வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து, நவ்யாவைக் கொன்றது தெரியவந்தது.


பிரசாந்தை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post