இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படுவதற்கு காரணம்:

இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படுவதற்கு காரணம்:

Reasons for the appearance of aging


இளமையிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதற்கு நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது. 

சிலர் முகத்தை அழகாக்க க்ரீம் பயன்படுத்துவார்கள். சிலர் இயற்கையாகவே அழகாக இருப்பார்கள், ஆனால் வயதாகும்போது உங்கள் சருமம் சுருக்கமடைய ஆரம்பிக்கும். அதனால்தான் நீங்கள் இளமையாக இருக்கும்போது உங்கள் தோல் சுருங்குகிறது.

நாம் இளமையாக இருக்கும் போது நமது சருமத்திற்கு செய்யும் செயல்கள் வயதாகும்போது சுருக்கங்களை உண்டாக்கும். இதனாலேயே நாம் இளமையாக இருக்கும் போது நாம் உண்மையில் இருப்பதை விட வயதானவர்களாகத் தெரிகிறோம்.

இளம் வயதிலேயே ஒருவர் தனது வயதை விட வயதானவராக தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களில் சில மரபியல் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக இருக்கலாம்.

Reasons for the appearance of aging


இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படுவதற்கு காரணம்:


புற ஊதா கதிர்கள்:

புற ஊதா கதிர்கள் தோலில் ஏற்படும்  சுருக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவை தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோல் சுருக்கம் அடைய செய்கின்றன. நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று பார்த்தாலும் சரி வெயில் படாதவாறு உங்களின் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை பயன்படுத்துவது நல்லது.


Reasons for the appearance of aging


புகை பிடிக்கும் பழக்கம்

புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இதனால் தோல்கள் பலமில்லாமல் தொங்க ஆரம்பித்து விடும். அதனால் உங்களின் இளமையை கடைபிடிப்பதற்கு புகை மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.


மன அழுத்தம்:


 நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது கொலாஜன் உற்பத்தியை குறைய செய்கிறது. எப்பொழுதாவது ஒரு முறை மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சனையில்லை, அதுவே அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசோல் என்ற மன அழுத்தம் ஹார்மோனின் அதிகப்படியான சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டினைச் பாதிக்க செய்கிறது. 

Reasons for the appearance of aging


அதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்திலுருந்து வெளியே வருவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.  


வறண்ட சருமம் உள்ளவர்கள்: 

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். சருமம் ஈரப்பதமாக இருப்பதால் வறண்ட சருமம் ஏற்படாமலும், தோலில் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது. 

Reasons for the appearance of aging


நீங்கள் சரியாக தூங்காமல் இருந்தால் ph நிலை ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது. மேலும் கொலாஜன் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதனால் சரியான நேரத்திற்கு தூங்குவது அவசியமானது.



அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவது:

அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது நன்மைகளை தந்தாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பல் பிரச்சனைகளை ஏற்படுத்தி கொலாஜன் உற்பத்தியை குறைய ஆரம்பித்து தோல் சுருக்கங்கள் ஏற்படும்.

Reasons for the appearance of aging


சத்து குறைபாடு:

சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி,டி,பி, ஈ, கே போன்ற சத்துக்கள் உடைய உட்கொள்வது அவசியமானது. இந்த சத்துக்கள் குறைந்தாலும் தோலில் முகப்பரு, தோல் சுருக்கம், முகத்தில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Post a Comment

Previous Post Next Post