உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள்

 

the World Boxing Championship

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் 51 கிலோ எடைப்பிரிவில் தீபக் போரியா கிரிகிஸ்தானின் தியூஷிபேவ் நூர்ஜிகித் என்பவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். 


57 கிலோ எடைப்பிரிவில் ஹுசாமுதீன், பல்கேரியாவின் டையஸ் இபானேஜ் என்பவரை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். 71 கிலோ எடைப்பிரிவில் நிஷாந்த் தேவ், கியூபாவின் ஜார்ஜ் கியூவெல்லாரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் மூவருக்கும் குறைந்தது வெண்கலப் பதக்கம் உறுதியானது. 


அத்துடன், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்திய குத்துச் சண்டை வீரர்கள் 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் மணீஷ் கவுசிக் வெண்கலம் மற்றும் அமித் பங்கால் வெள்ளி பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது.

Post a Comment

Previous Post Next Post