அகமதபாத்: ஐபிஎல்லில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் இன்று சாஹா , கில் அதிரடியால் குஜராத் அணி 226 ரன்கள் குவித்தது.
முதலில் டாஸ் வென்று குஜராத்தை பேட்டிங் செய்ய பணித்தது லக்னோ அணி.இதனைத் தொடந்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா, கில் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த இணை லக்னோ பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டிரிகளாக விளாசினர்.
இதில் 43 பந்துகளில் சாஹா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கில் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இவர்களை தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 25 ரன்களும், மில்லர் 21 ரன்களும் சேர்க்க 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.இதனைத் தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி தனது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது.
லனோவுக்கு எதிரான இப்போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் குஜராத் அணிக்கு ப்ளேப் ஆப் செல்லும் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.