கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!
ஆண்டுதோறும் கோடை காலம் வந்து விட்டாலே அதனின் வெப்பத்தை பொறுத்து கொள்ள முடியமால் நாமும் பல வகையான குளிர்ச்சி தரும் பொருட்களை நமது உணவில் சேர்த்து கொள்வோம். அப்படி நாம் நமது உடலின் குளிர்ச்சியை அதிகரிப்பதற்காக அடிக்கடி சேர்த்து கொள்ளும் உணவுகளில் இந்த சர்பத் வகைகளும் ஒன்று ஆகும்.
அப்படி நாம் பல வகையான சர்பத்துகளை பருகி இருப்போம். ஆனால் நம்மில் பலரும் பருகி இருக்காத கோடை கால ஸ்பெஷல் நொங்கு சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கோடைகால ஸ்பெஷல் நொங்கு சர்பத் செய்வது எப்படி என்பதை அறிந்து கொண்டு அதனை செய்து சுவைத்து பாருங்கள்.
கோடை கால ஸ்பெஷல் நொங்கு சர்பத் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பற்றி தான் இங்கு விரிவாக பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
முதலில் இந்த சர்பத் தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
நொங்கு – 5
எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
சர்பத் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
சப்ஜா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உங்க வீட்ல பிரட் இருக்கா அப்போ கோடை காலத்திற்கு ஏற்ற குளுகுளு குல்ஃபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைககளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவிடுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 5 நொங்கினை எடுத்து அதன் உள்ளே உள்ள தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதனுடைய தோல்களை நீக்கி விட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி கொள்ளுங்கள்.
திராட்சையை வைத்து இவ்வளவு ருசியான ரெசிபி செய்யலாமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
ஸ்டேப் – 3
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள நொங்கு மற்றும் நொங்கிலிருந்து எடுத்து வைத்திருந்த தண்ணீரையும் சேர்த்து லேசாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் சர்பத் சாறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாம் முன்னரே ஊற வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது கோடை கால ஸ்பெஷல் நொங்கு சர்பத் ரெடி வாங்க சுவைக்கலாம் நீங்களும் இந்த நொங்கு சர்பத்தினை செய்து குடியுங்கள்.