ஒரு பெரிய கரடியின் பிடியில் இருந்து இளம்பெண்கள் தப்பிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்கள் தங்கள் திறமை மற்றும் துணிச்சலைப் பயன்படுத்தி தப்பிக்க முடிந்தது.
நாம் சிறுவயதில் கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு கரடியைக் கண்டால் பயம், ஆனால் சிலருக்குப் பயமே இருக்காது. ஒரு நபர் கரடியை விட்டு ஓடலாம், ஆனால் மற்றொரு நபர் அங்கேயே படுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு நடந்த மிக அபூர்வ நிகழ்வின் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் சிலர் இது சில வருடங்களுக்கு முன்பு வெளியான பழைய வீடியோ என்று நினைக்கிறார்கள்.
மலைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்ற பெண்களை கரடி ஒன்று நெருங்குவதும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்கச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வீடியோவில் மூன்று பெண்கள் காணப்படுகிறார்கள், இறுதியில் கரடி அவர்களை பின்னால் இருந்து அணுகத் தொடங்குகிறது. கரடி சிறிது நேரம் இளம் பெண்ணை மோப்பம் பிடிக்கிறது, பின்னர் அது அவளுடைய தலைமுடியைப் பிடித்து முகத்தை முகர்ந்து பார்க்க முயற்சிக்கிறது.
கரடி நடப்பதை நிறுத்திய பிறகு, அந்த இளம் பெண் அங்கேயே நின்றாள். ஆனால் அவள் பக்கத்தில் இருந்த ஒரு பெண் கரடி தன்னை தாக்க வரும் என்ற அச்சத்தில் கொஞ்ச கொஞ்சமாய் அதிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்கிறார். இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அருகில் இருந்த ஒருவர் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ ட்விட்டரில் அதிக லைக்குகளையும் பார்வைகளையும் பெற்று வருகிறது.
How to survive a bear attack… stand still and stay silent pic.twitter.com/0uI9X5cgC9
— OddIy Terrifying (@OTerrifying) March 24, 2023
பொதுவாக, வன விலங்குகள் தொந்தரவு செய்தால் கோபப்படும். தாக்கும் இயல்பு கொண்டவை. அதுபோன்ற சூழலில் அவர்கள் அமைதி காத்த நிகழ்வுதான் இணையத்தில் வைரலாக காரணமாகி இருக்கிறது.