மின் பொறியாளர் மன உளைச்சலில் இருந்து வெளிவர விடுமுறை விண்ணப்பித்துள்ளார்

மின் பொறியாளர் மன உளைச்சலில் இருந்து வெளிவர விடுமுறை விண்ணப்பித்துள்ளார்

 applied for leave to recover from depression

மின்வாரிய பணியாளர்கள் உரிமைகளை வலியுறுத்தி நாளை கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல மின் வாரிய ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இவர்களின் ஊழியர்களில் ஒருவரான புதுக்கோட்டையைச் சேர்ந்த உதவி மின் பொறியாளர் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து காரணங்களால் சம்பந்தப்பட்ட ஊழியர் விடுப்பு எடுக்க முடியாது என்று மின் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.நாளை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணியாக செல்கின்றனர். இதில் பல ஊழியர்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளிடம் இன்று விண்ணப்பம் அளித்துள்ளனர்.

electric board employee leave letter

இந்நிலையில் தான் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் உதவி மின் பொறியாளராக பணியாற்றும் ரகுநாதன் என்பவர் விடுமுறை வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.


அந்த விடுமுறை விண்ணப்பத்தில், “தான் கடந்த சில வாரங்களாக பணியாளர்கள் வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.விரைவில் குணமடைந்து மீண்டு வந்து வாரிய பணிகளை  தொடர வேண்டும் என விரும்புகிறேன். அதனால்  என் மன அமைதியை வேண்டி, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு  முன்பு அமர்ந்து வீட்டிலேயே பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கு எனக்கு ஒருநாள் விடுப்பு வேண்டும்” என்று உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளார்.

விண்ணப்பக் கடிதத்தை பார்த்து அதிர்ந்து போன மின்வாரிய உயர் அதிகாரிகள்,விடுமுறை அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதுகுறித்து செயற்பொறியாளர் (பொ) முருகேசனிடம் கேட்டபோது, ​​இந்தக் காரணங்களுக்காக விடுமுறை அளிக்க முடியாது என்று ஏற்கெனவே கூறியதாகத் தெரிவித்தார்.




புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் ஒருவர், மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம் செய்ய அனுமதிக்கக் கோரி  விண்ணப்பம் கடிதம் கொடுத்த நிகழ்வுஅதிகாரிகளிடம் இருந்தவர்களிடையே கடும்  சர்ச்சைகளையும்,அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.

Post a Comment

Previous Post Next Post