சிலரது உண்ணும் முறையும், வாழ்க்கை முறையும் காரணமாக, சிலரின் உடல்கள் அவர்கள் விரும்பியபடி வடிவமைக்கப்படுவதில்லை. இது எடை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். ஆனால் சில நேரங்களில் இரண்டையும் செய்ய நேரம் கிடைப்பது கடினம்.
இன்று நாம் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் உடல் எடையை குறைக்கும் வழியை பற்றி பேச போகிறோம். இந்த உதவிக்குறிப்பு உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்களை நன்றாக உணரவும் உதவும்.
உங்கள் உடல் எடையை குறைக்க, இந்த பதிவை முழுமையாக படித்து, குறிப்புகளை பின்பற்றவும்.
எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் உங்கள் எடையைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.
கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 சிறிய துண்டு
பிரியாணி இலை – 2
கிராம்பு – 5
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்
கருஞ்சீரகத்தை வறுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். பிறகு நன்றாக வறுக்கவும்.
வெந்தயத்தை வறுத்து கொள்ளவும்:
கடாயில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து நன்கு வேகும் வரை நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
பட்டையை சேர்த்து கொள்ளவும்:
இரண்டு சிறிய பட்டைகளை வாணலியில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
பிரியாணி இலை மற்றும் கிராம்பை சேர்த்து கொள்ளவும்:
கடைசியாக கடாயில் 2 பிரியாணி இலை மற்றும் 5 கிராம்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
பின்னர் இவற்றையெல்லாம் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி அரைத்த பொடியை 1 டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் அதனை வடிகட்டி அதனுடன்1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலக்கவும்.இந்தக் கலவையை எடுத்துஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.