வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம்

வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம்

 

An incident where a lawyer was hacked to death

சென்னையில் வக்கீல் மரணம் . வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

7 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடியான சி.டி.மணி என்பவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட வழக்கில் தற்போது பணியாற்றி வரும் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் (32).வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியதில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

An incident where a lawyer was hacked to death


இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்களோடு பேசி விட்டு இரவு துரைப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை கத்தியால் கொடூரமாக வெட்டிக் விட்டு தப்பியோடி விட்டனர். இதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் படுகாயமடைந்த ஜெய்கணேஷை அருகில் உள்ளவர்கள், துரைப்பாக்கம் போலீசார் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடலைக் கைப்பற்றிய துரைப்பாக்கம் போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post