நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.புனித ரமலான் நோன்பு

நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.புனித ரமலான் நோன்பு

 

Holy Ramadan fasting

இன்று நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.


ரமலான்  இஸ்லாமியர்களுக்கு சிறப்பான காலம். ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். நம் உறவுகளில் கவனம் செலுத்தி ஏழைகளுக்கு உதவ வேண்டிய நேரம் இது.


இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். 


இன்று வளைகுடா நாடுகளில் பலர் பிறையை பார்த்தனர். இதுவே ரமலான் மாதத்தின் முதல் அறிகுறி என்பதால் நோன்பு துவங்கியது. தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார்.

இன்று இஸ்லாமியர்கள் அனைவரும்ரமலான்  நோன்பு நோற்கிறார்கள். நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.

Holy Ramadan fasting

நோன்பு இருக்கும் முஸ்லிம்களுக்கு நோன்பு காலங்களில் மிகவும் பசியுடன் இருப்பதும், வாக்குவாதங்களைத் தவிர்த்து இரக்கத்துடனும் கருணையுடனும் தர்மம் செய்வது சிறப்புப் பொறுப்பாகும்.


நாகூரில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் கூறியதாவது: தொழுகையில் அதிக நேரம் செலவிடும் இசுலாமியர்கள், உலக மக்கள் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி பாதுகாப்பாக வாழவும், உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழவும் பிரார்த்தனை செய்வோம். மீண்டும் கொரோனா அச்சம் தொற்றியுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நோய் நொடி இல்லாமல் வாழ பிரார்த்தனை மேற்கொள்வோம்” தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post