"ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி நான். இதைப் பற்றி நீங்கள் யாரிடமும் எதுவும் சொல்லிடாதீங்க"- விசாரணையில் வெளியான தகவல்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் வ கடந்த வாரம் திருட்டு சம்பவம் முக்கிய குற்றவாளி ஈஸ்வரி தனது வீட்டில் அரங்கேற்றிய நாடகம். அது குறித்த செய்தி தொகுப்பு. இச்சம்பவம் குறித்த செய்தி தொகுப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டை தனது பினாமியாக வாங்கியதாகவும், வெளியுலகுக்கு இது எங்கள் வீடு என்றும் உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என கணவரிடம் கூறியுள்ளார். உண்மையில் இந்த வீடு நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்ட ரூ. 9 லட்சம் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்து வங்கிக் கணக்கில் அடகு வைத்த 350 கிராம் தங்க நகைகளை கைப்பற்ற போலீசார் முயற்சித்து வருகின்றனர்.இந்த திருட்டில் அங்கமுத்துவுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில்சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து அங்கமுத்துவுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் வகையில் ஈஸ்வரி செயல்பட்டுள்ளது தெரியவந்தது.
வீடு வாங்குவது தொடர்பாக ஈஸ்வரி வீட்டில் நாடகம் நடத்தியுள்ளார். அதில், சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் , வெளியுலகிற்கு இது எங்கள் வீடு என்றும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமானது என்றும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.