நாம் இளநீரை கோடையில் கொஞ்சம் அதிகமாகவே குடிப்போம். வெளியில் எங்கு சென்றாலும் இளநீர் வாங்கி குடிப்போம்.காரணம் இதில் உள்ள மினரல்கள் தாகத்தை தணிக்கின்றன. இவற்றில் மேலும் நன்மைகளும் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் தீமைகளும் இருக்கின்றது.
இளநீர் உள்ள சத்துக்கள்:
இந்த இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் இதில் உள்ளது.
ஒரு கப் இளநீரில் பல்வேறு கனிமங்கள் உள்ளன. உதாரணமாக, இதில் 600 mg பொட்டாசியம், 250 mg சோடியம், 60 mg மெக்னீசியம், 58 mg கால்சியம் மற்றும் 48 mg பாஸ்பரஸ் உள்ளது.
இளநீர் நன்மைகள்:
உடல் சூடு:
தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. தினமும்ஒரு இளநீர் குடித்து வந்தால் அது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும்.
முகப்பரு:
முகப்பரு என்பது சருமத்தில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. இது சருமத்தை வறண்டு, சிவந்து, அரிப்பு உண்டாக்கும். முகப்பரு மற்ற தோல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் .தினமும்இளநீர் குடித்து வந்தால் முகப்பருவைத் தடுக்கலாம்.
சிறுநீர் எரிச்சல்:
சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீர் பாதையில் சில எரிச்சல் ஏற்படலாம். இது உங்களுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்,இதனை சரி செய்வதற்கு இளநீர் உதவுகிறது
முதுமை தோற்றம்:
இளநீரில் அதிக அளவு லாரிக் அமிலம் உள்ளது, இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்த:
இரத்தத்தை சுத்தப்படுத்துவது என்பது இரத்தத்தில் உள்ள அழுக்கு, பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவதாகும்.தேவையற்ற அசுத்தங்களை நீக்க இளநீர் உதவுகிறது. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடித்து வந்தால் இதற்கான பலனை காணலாம்.
யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது.?
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரைக் குடிப்பது நல்ல யோசனையல்ல, ஏனெனில் அது ஆபத்தானது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் நிறைய இளநீரைக் குடிக்கக் கூடாது என்று சில அறிவுரைகள் உள்ளன. ஏனெனில் இது அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
ஒரு நாளைக்கு எதனை இளநீர் குடிக்கலாம்:
ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிக்க வேண்டும். 250 ml முதல் 300 ml வரை ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும். அதிக இளநீர் குடிப்பதால் உங்கள் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இளநீர் குடிக்கும் முறை:
ஆரோக்கியமாக இருக்க, இளநீரை குடிக்கவும், இளநீரில் உள்ள வழுக்கையும் சேர்த்து சாப்பிட வேண்டும் இதில் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Tags:
Health