பள்ளி மாணவியை கடத்தி குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை.. தருமபுரி இளைஞர் போக்சோவில் கைது
தருமபுரி அருகே இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே உள்ள செந்தில் நகரில் வசித்து வருபவர் கார்த்திக். எலக்ட்ரீஷியனாக இருக்கும் இவர், தனது பெற்றோர் இருந்த கட்டிடத்திலேயே வேலை செய்து வருகிறார்.
இவர் தருமபுரியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 பேர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதை அறிந்த மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.கார்த்திக்கின் போன் எண்ணை சோதனை செய்ததில் அவர்கள் இருவரும் திருப்பூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருப்பூர் சென்று கார்த்திக் மற்றும் சிறுமி இருவரையும் அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையும் செய்ததாக, கார்த்திக் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டம் மற்றும் பெண்ணை கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.