புதினா-அற்புத மருத்துவ குணங்கள்

புதினா-அற்புத மருத்துவ குணங்கள்

 Mint - Amazing medicinal properties


 
பசியைத் தூண்டுவதற்கு புதினாகீரை பெரிதும் உதவும்சிறுநீரைப் பெருக்கும்வாயுப் பிரச்சனையை நீக்கும்சுவையின்மைப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் வாந்தி வரும் உணர்வு இருப்பவர்களும்புதினாவை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.

 

புதினாவை நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும்காய்ச்சல் சமயங்களில்உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்துஒன்றரை லிட்டர் நீர் சேர்த்துகால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும்இந்த நீரைமூன்றுநான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லிகுடித்துவந்தால்காய்ச்சல் சரியாகும்.

 

புதினாவுடன் உலர்ந்த பேரீச்சம்பழம்மிளகுஇந்துப்புஉலர்ந்த திராட்சைசீரகம் சம அளவு சேர்த்துஎலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும்இதைஉணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்கும்ருசியை உணரவைக்கும்.

ஈரில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகவும்வாய் துர்நாற்றத்தை போக்கவும்புதினா இலையைநிழலில் காயவைத்துப் பொடித்துபற்பொடியாகப் பயன்படுத்தலாம்.

 

புதினா இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்பெப்பர்மிண்ட் தைலத்தை போல இருக்கும்ஆனால்காரம் குறைவாக இருக்கும்இந்த எண்ணெயைத் தலைவலி வந்தால் தடவலாம்இந்த எண்ணெய்யைசிறிதளவு நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலிவயிறு மந்தம் நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.

 

புதினாவின் வாசனைக்குகொசுக்களை விரட்டும் தன்மை உண்டுஎனவேவீட்டில் புதினா செடிகளை வளர்க்கலாம்புதினா கீரை சாற்றுடன் சிறிது தேன் கலந்துதலையின் பக்கவாட்டில் தடவதலைவலி நீங்கும்.

 

தலைவலிமூட்டு வலிதசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பூசப்படும் களிம்புகளிலும் செரிமானக் கோளாறுகள்இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post