உடல், கை கால் எரிச்சலை போக்கும் அகத்தி கீரைபயன்கள்

உடல், கை கால் எரிச்சலை போக்கும் அகத்தி கீரைபயன்கள்

 Agathi spinach benefits to relieve body,

அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபிடீ அதிகம் குடிப்பதனால் ஏற்படும் பித்தம் ஆகியவற்றை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 

அகத்தி பூக்கள் 3 எடுத்துக்கொள்ளவும்அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டுஅரை ஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்க்கவும்ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி பருகலாம்இந்த தேனீரை வாரம் ஒருமுறை குடித்துவர பித்தம் குறைந்து வெப்பம் தணியும்.

 அகத்தியில் கால்சியம் அதிகளவில் உள்ளதுவைட்டமின் சிபாஸ்பரஸ்நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறதுஇரும்பு சத்து அதிகம் உள்ள அகத்திவயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம்தோல் பிரச்னைபித்தத்தால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை போக்குகிறதுகாய்ச்சலை தணிக்கிறதுஉடல் உஷ்ணத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது. 

 

அகத்தி வேரை பயன்படுத்தி உடல்கை கால் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்ஒரு பிடி அளவு வேரை  சுத்தப்படுத்தி எடுக்கவும்ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்வடிகட்டிதேன் சேர்த்து குடித்துவர உள்ளங்கைகால் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும்கண் எரிச்சல் குணமாகும்இதை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

 

அகத்தியானது உடல் வெப்பத்தை சமப்படுத்தும் உன்னதமான உணவுவயிற்று கிருமிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டதுபித்த சமனியாக விளங்குகிறதுஅகத்தி கீரையை பயன்படுத்தி இளநரையை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

 

ஒரு பங்கு கீரை பசை,2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்சிறிது கிச்சிலி கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி கலவையை சேர்க்கவும்பின்னர்ஆற வைத்து வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்இதை வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு இருக்காதுஇளநரை வராதுஉடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

 

அகத்தி கீரையை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் ஏற்படும்இதை அளவுக்கு அதிமாக பயன்படுத்த கூடாது.

Post a Comment

Previous Post Next Post