கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடி

கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடி

 Camphor Kaṟpūravalli  is a medicinal herb

கற்பூரவல்லிஅல்லதுகற்பூரவள்ளி(Coleusaromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்இதுபுதராக வளருகிறதுவாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும்விளிம்புகூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும்கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.


ஊட்டச்சத்துக்கள் 

100 கிராம் கற்பூரவல்லியில் 4.3 கிராம் கொழுப்பு, 25மிகி சோடியம்,1,260மிகி பொட்டாசியம்,69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளதுமேலும் வைட்டமின்  (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து(204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.

ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில்ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின்  மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளதுஇதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கிமுதுமைத் தோற்றத்தை தடுப்பதோடுபல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.

கற்பூரவல்லி பயன்கள்

இருமல்சளி போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறதுஇந்த இலையின் சாற்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி பிரச்னை வராதுதலைவலி இருக்கும் சமயத்தில் கற்பூரவல்லி சாற்றையும் சிறிதளவு நல்லெண்ணெய்யும் கலந்து தலையில் பற்று போட்டால் வலி குறையும்குழந்தைகளுக்கு இந்த இலை சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கலாம்வாந்திஅஜீரணம் பிரச்னைகள் இருந்தால் தீர்வு கிடைக்கும்.


கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளதுஇந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள்எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது ஆஸ்டியோபொராஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.


புற்று நோய் உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுகிறதுமார்பக புற்று நோய் மற்றும் பிரஸ்ட்ரேட் புற்று நோயுக்கு கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்று நோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post