பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் உங்கள் குடும்பத்தின் நிதியை நிர்வகிப்பது கடினமாக இருக்கும், எனவே குடும்பத்தில் உள்ள அனைவரும் சுயதொழில் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும், இதனால் விஷயங்கள் கடினமாக இருந்தாலும் நாம் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்றுக் கொண்டு அதனை தொடங்க வேண்டும்.
சுயதொழில் என்பது உங்களுக்காக வேலை செய்வதற்கான ஒரு வழியாகும், இது மிகவும் இலாபகரமானதாக இருக்கும். இன்று, பிரண்டை உப்பு தயாரிக்கும் சுயதொழிலைப் பற்றி அறியப் போகிறோம். உங்கள் சொந்த வருமானத்தை ஈட்ட இது ஒரு சிறந்த வழியாகும், மேலும் நீங்கள் இந்த தொழிலை மிக எளிதாக தொடங்கலாம்.
பொதுவாக பிரண்டையில் பலவகையான மருத்துவ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சத்துக்கள் உள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் உப்பில் மற்ற உணவுகளைப் போலவே சத்துக்கள் நிரம்பியுள்ளன.
பலர் உப்பை பயன்படுத்துவதால், சொந்தமாக உப்பு வியாபாரம் செய்தால் வெற்றி கிடைக்கும்.இந்த பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழிலை துவங்கினார்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பிரண்டை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் தயாரிக்கும் பிரண்டை உப்பினை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கிவைத்துள்ள பிரண்டையை நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு சாறுபோல் காயவைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதனை எரித்து அதில் கிடைக்கும் சாம்பலை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி 1 நாள் முழுவதும் நன்கு ஊறவிடுங்கள். பின்னர் அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டிவிட்டு அந்த பொடியினை மட்டும் எடுத்து நன்கு காயவைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.
வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பிரண்டை உப்பினை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து தயாரிக்கும் இடம் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ பிரண்டை உப்பின் விலை 22,500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 5 கிலோ பிரண்டை உப்பினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1,12,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக 15 நாட்களில் 16,87,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.