ஒருவர் கடன் வாங்கும் போது, கடன் குறித்த அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் அட்டவணை மற்றும் பிற முக்கிய விவரங்களை அறிந்து கொள்வது இதில் அடங்கும்.
ஏனென்றால் கடன் வாங்கிய அதற்கான வட்டியும்,EMI தொகை தெரிந்த பிறகு இவ்வளவு தொகை என்று தெரிந்திருந்தால் கடனை பெறாமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க கூடாது.
நீங்கள் வங்கியில் கடன் வாங்கினாலும், அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வங்கிகளில் இருந்து கிடைக்கும் கடன்கள் பற்றிய தகவலை நாங்கள் வெளியிடுகிறோம், எனவே நீங்கள் சிறந்த ஒப்பந்தத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியன் வங்கியில் 9 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் EMI செலுத்துவீர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்தியன்
வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
SBI வங்கியில்
தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மி தானா..!
வட்டி:
இந்தியன்
வங்கியில் தனிநபர் கடனுக்கு
வட்டியாக 9.20% வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன்
காலம்:
இந்தியன்
வங்கியில் தனிநபர் கடனை
வாங்கிய பிறகு 7 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.
மாதத்தவணை:
நீங்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 14,572 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 9 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 3,24,022 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 9 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 12,24,022 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.